கொலன்னாவை உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் டான் பிரியசாத் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு தகவல் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது உறவினரின் வீட்டில் நேற்று இரவு டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த டான் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com/
