மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் பெப்ரவரி 2025ஆம் ஆண்டுக்கான, வறுமைக் கோட்டு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையின்படி, ஒரு தனிநபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதத்திற்கு குறைந்தபட்சம் 16,318 ரூபா தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தரவுகளின்படி, அடிப்படை மாதாந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அதிகபட்ச செலவு கொழும்பு மாவட்டத்தில் 17,599 ரூபாவாகவும், மிகக் குறைந்த செலவாக மொனராகலை மாவட்டத்தில் 15,603 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
வறுமைக் கோடு என்பது அடிப்படை உணவு மற்றும் உணவு அல்லாத தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நபருக்குத் தேவையான குறைந்தபட்ச செலவைக் குறிக்கிறது.
மேலும், பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் இது மாதந்தோறும் திருத்தப்படுகிறது.
Link: https://namathulk.com/
