பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் திட்டம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்துடன் தொடர்புள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அதனைச் செயல்படுத்த கொள்கை ரீதியான முடிவு எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.
இந்தத் திட்டத்துடன் தொடர்புள்ள அனைத்துத் தரப்பினருடன் இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக நந்திக சனத் குமாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.







Link: https://namathulk.com/
