ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று தீ விபத்தில் எரிந்து நாசமாகியதாக பொலிசார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியின் ஓட்டுநர், ஹட்டன் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருள் எடுத்துக்கொண்டு, மேலும் இரண்டு பயணிகளுடன் கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பிரதான வீதியில் பயணித்த வாகன சாரதிகளும், பிரதேச மக்களும் தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிசார், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறினார்.
அத்துடன், முச்சக்கர வண்டி தீ விபத்தில் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் எரிபொருள் கசிவு என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
Link: https://namathulk.com/
