இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் நேற்று (22) வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 23 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக மீதமுள்ள 14 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com/