இலங்கை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வியாழக்கிழமை வெளிப்படையான மற்றும் பொருத்தமற்ற மொழி பயன்பாடு காணப்பட்டது.
இணையதளத்தில் பகிரப்படும் ஒரு திரைப்பிரதியில்(screenshot), அமைச்சின் செயலாளர் தொடர்பான தகவல்களை காண்பிக்கும் பிரிவில் ஆபாச வசனங்கள் உள்ளடக்கப்பட்டு, அதன் தேடல் முடிவுகளும் காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு மொழி பிரயோகம் காணப்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளம் ஊடுறுவப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் இதுவரையில் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களையும் விடுக்கவில்லை.
Link: https://namathulk.com/