உள்ளூரில் களமிறங்கும் பெங்களூரு அணி – ராஜஸ்தானுடன் இன்று மோதல்.

Aarani Editor
0 Min Read
RCBvsRR

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 42-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி வெளியூரில் நடந்த 5 ஆட்டங்களிலும் வெற்றியையும், சொந்த மைதானத்தில் நடந்த 3 ஆட்டங்களிலும் தோல்வியையும் சந்தித்துள்ளது.

சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆடிய 3 ஆட்டங்களில் முறையே 169, 163, 95 ரன்களையே எடுத்துள்ளது.

வெளியூரில் ஒரு ஓவரில் 9-10 ரன் சேர்க்கும் அந்த அணி சொந்த மைதானத்தில் 7-8 ரன்னை தாண்ட முடியாமல் பரிதவிக்கிறது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *