கண்டியில் சிறி தலதா வழிப்பாட்டிற்காக கூடியிருக்கும் பெருந்திரள் கூட்டத்தை நிர்வகிக்க, இன்றிரவு முதல் சிறப்பு அடையாள அட்டை முறையை பொலிசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
கிட்டத்தட்ட 400,000 பக்தர்கள் ஏற்கனவே கலந்து கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரிசைகள் மிக நீளமாக இருப்பதால், ஒரு நாளைக்கு 100,000 பேரை அனுமதித்தாலும் தற்போதைய எண்ணிக்கையை குறைக்க குறைந்தது மூன்று நாட்கள் ஆகும் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை காரணமாக, கூட்டத்தைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு கண்டிக்கு பயணிக்க வேண்டாம் எனவும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.
இதற்கிடையில், வரிசையில் இருந்த ஒருவர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Link: https://namathulk.com/