சுட்டுக்கொலை செய்யப்பட டான் பிரியசாத்தின் கொலை, பாதாள உலகக் குழு தலைவரான கஞ்சிபானை இம்ரானின் சதி அல்லது, வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவினரின் செயலாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
கஞ்சிபானை இம்ரானை கைது செய்ய வேண்டும் என, சுட்டுக்கொல்லப்பட்ட டான் பிரியசாத் அண்மையில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் டான் பிரியசாத் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திலும் தனிப்பட்ட ரீதியில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார் .
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொழும்பு வெல்லப்பிட்டி பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் வைத்து துப்பாக்கு சூட்டுக்கு இலக்கானார்.
துப்பாக்கிதாரிகள் டான் பிரியசாத் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டபோது பதிவாகிய CCTV காணொளிகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின்னர் டான் பிரியசாத் உயிரிழந்தார் .
தேசிய வைத்தியசாலையின் பிண அறையில் வைக்கப்பட்டிருந்த அவரின் சடலத்தை மனைவி மற்றும் உறவினர்ல்கள் பார்வையிட்டு உறுதி செய்துள்ளனர் .
சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் , டான் பிரியசாத் தொடர்பில் கஞ்சிபானை இம்ரான் மர்ருமொருவருடன் உரையாடியதாக கூறப்படும் ஒலிப்பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
உயிரிழந்த டான் பிரியசாத்தின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
டான் பிரியசாத் என்பவர் சிங்கள மக்களிடம் நன்கு பரீட்சயமானவராக காணப்படுகிறார்.
இதற்கு பல காரணங்கள் உண்டு.
ஆரம்பத்தில் பாதாள உலகக் குழுவினருடன் இணைந்து பல சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டமை அதில் ஒரு விடயமாகும்.
நவ சிங்கள தேசிய சபை என்ற அமைப்பின் தலைவராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.
கண்டி திகன பகுதியில் 2019 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இனவாத வன்முறை தொடர்பில் கைது செய்யப்பட பிரதான நபர்களில் டான் பிரியசாதும் ஒருவராவர்.
அதேபோல காலி முகத்திடலில் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற மக்கள் எழுச்சி போராட்டத்தின் போது ஐவரும் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட விடயமும் சிங்கள சமூகத்தில் பேசுபொருளாக காணப்பட்டது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளராக காணப்பட்ட டான் பிரியசாத் , இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலிலும் கொலன்னாவை நகர சபைக்காக போட்டியிட்டுள்ளார்.
Link: https://namathulk.com/
