வத்திக்கான் தூதரகத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
இலங்கைக்கான வத்திக்கான் திருத்தந்தை அருட்தந்தை பிரையன் என். உதெய்க்வே ஜனாதிபதியை வரவேற்றார்.
பேராயர் உதெய்க்வே உடனான ஒரு சுருக்கமான கலந்துரையாடலுக்குப் பின்னர், இரங்கல் புத்தகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கையெழுத்திட்டார்.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக, உலக கிறிஸ்தவ சமூகத்திற்கு தனது மனமார்ந்த இரங்கலை ஜனாதிபதி தெரிவித்தார்.
Link: https://namathulk.com/