காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பல சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளதுடன், இதை ‘கொடூரமான குற்றம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச் செயல், தீவிரவாதத்தின் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை தெளிவாக நினைவூட்டுவதாகவும், ஒருங்கிணைந்து கவனிக்கப்பட வேண்டிய விடயம் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமின் மேல் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியை சுற்றியுள்ள அடர்ந்த காடுகளில் இருந்து வெளிவந்த பயங்கரவாதிகள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததற்காக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல இராஜதந்திர நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
Link: https://namathulk.com/