உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்த விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மே மாதம் 07 ஆம் திகதி வழமை போல பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளை எதிர்வரும் நான்காம் திகதி கிராம உத்தியோகஸ்தர்களிடம் கையளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு கூறியுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடிய கதிரை, மேசைகள் உள்ளிட்ட தளபாடங்களை வழங்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது .
Link: https://namathulk.com/