இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருநாட்டு இராணுவத்தினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது .
இந்நிலையில் காஷ்மீருக்கான பயண ஆலோசனையை வெளியிடுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின் நிலைமை வழமையை விட மோசமாக உள்ளதென இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு ஒப்பந்த நிபந்தனைகளை மீறும் செயல் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தானால் தொடர்ந்து நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் உரிமைகளைத் தடுக்கிறது என இந்தியாவின் நீர்வளத்துறை செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி தெரிவித்துள்ளார்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட ஓரிரு நாட்களில் இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுடன் “எல்லை தாண்டிய தொடர்புகளை” கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளை வெளியேற்றுதல், ஆறு தசாப்தங்களுக்கும் மேலான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல் மற்றும் அட்டாரி நிலப் போக்குவரத்து சாவடியை உடனடியாக மூடுதல் உள்ளிட்ட பல கடுமையான நடவடிக்கைகளால் பாகிஸ்தானை இந்தியா கடுமையாகத் தாக்கியுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் நேபாள நாட்டவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
Link: https://namathulk.com/
