கண்டி ஸ்ரீ தலதா வழிபாட்டில் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிசார் உயிரிழந்துள்ளனர்.
இந்த விடயத்தை இலங்கை பொலிஸ் திணைக்களம் தனது முகப்புத்தாக தளத்தில் பதிவிட்டுள்ளது
இதேவேளை அறிவுறுத்தல்களை பின்பற்றாது அதிகளவான பக்தர்கள் ஸ்ரீ தலதா வழிபாடுகளுக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாத்திரம் 60,000 பக்தர்கள் தலதா மாளிகைக்கு சென்றுள்ளனர்.
இதனால் கண்டி நகர் பகுதியில் கடும் சன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதியுடன் ஸ்ரீ தலதா வழிபாடுகள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com/