கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று சுங்க அதிகாரிகளால் 228 புதிய கையடக்க தொலைபேசிகளும் டெப்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றின் மொத்த பெறுமதி 30 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பயணப் பொதிகளில் கைவிடப்பட்ட நிலையில் இந்த கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த ஒரு பயணியால் இந்தப் பொருட்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுங்க அதிகாரிகள் மூலம் பொருட்களை வெளியேற்றுவதில் உள்ள சிரமத்தை உணர்ந்த பயணி, குறித்த பயணப் பொதிகளை வரி இல்லாத பகுதியில் விட்டுச் சென்றதாக நம்பப்படுகிறது.
Link: https://namathulk.com/