ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கண்டிக்கு திடீர் விஜயம்

Aarani Editor
1 Min Read
Anura Kumara

ஸ்ரீ தலதா வழிபாடு மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று இரவு கண்டி நகருக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்திய ஜனாதிபதி, ஸ்ரீ தலதா வழிபாட்டிற்காக வருகை தரும் பக்தர்களுக்கு சுகாதார பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட தேவையான வசதிகளை வழங்குவதற்கு எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல பண்டார, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன்,கண்டி மாவட்ட செயலாளர் இந்திக்க உடவத்த உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *