கொழும்பு வெல்லம்பிட்டியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் டான் பிரியசாத்தின் கொலைக்கு ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் 28 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீதொட்டமுல்ல பஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை, ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
டான் பிரியசாத்தின் , குறித்த இளைஞன் சதி செய்து உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்ற டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு துப்பாக்கிதாரிகள் வீட்டிற்குள் புகுந்து டான் பிரியசாத்தை சுட்டுக் கொன்றுவிட்டு அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை தொடர்பாக இதுவரை பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Link: https://namathulk.com/
