பங்களாதேசில் கப்பம் பெறுவதற்காக கடத்தப்பட்ட ஒரு பெண் உட்பட மூன்று இலங்கையர்கள் அந்நாட்டு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் சந்தித்த ஒரு நண்பரின் அழைப்பின் பேரில் குறித்த மூவரும் பங்களாதேஷுக்கு பயணம் செய்திருந்தனர்.
கடத்தல் தொடர்பாக, அழைப்பிதழை அனுப்பிய நபர் உட்பட மூன்று பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பங்களாதேஷுக்கு சென்றவர்களின் இலங்கையிலுள்ள உறவினர்களிடம் தொலைபேசி அழைப்பினூடாக கப்பம் கோரப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கடத்தல்காரர்களின் ஒருவருடைய வீட்டிலிருந்து இலங்கையர்கள் மூவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
Link: https://namathulk.com/