வத்திகானில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்துக் கொள்ளவுள்ளார்.
இறுதிச் சடங்கில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு நாளை சனிக்கிழமை, அந்நாட்டு நேரப்படி காலை 10 மணிக்கு புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.
88 வயதான பரிசுத்த பாப்பரசர் , கடந்த திங்கட்கிழமை பக்கவாதம் மற்றும் மீளமுடியாத இதய செயலிழப்பு காரணமாக நித்திய இளைப்பாறினார்.
இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பரிசுத்த பாப்பரசர் ஐந்து வாரங்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில் நித்திய இளைப்பாறியுள்ளார்.
Link: https://namathulk.com/
