இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போர் பதற்றத்தை தனித்து, பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கமைய இரு நாடுகளும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை
வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக்கொள்ளுமாறு ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எந்தவொரு பிரச்சினையும் அர்த்தமுள்ள பரஸ்பர ஈடுபாட்டின் மூலம் அமைதியாக தீர்க்கப்பட முடியும், என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 26 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
link: https://namathulk.com/
