இந்திய பிரதமர் மோடியுடன் , ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொலைபேசியில் கலந்துரையாதியுள்ளார்.
பஹல்கம் பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.
சுமார் 15 நிமிடங்கள் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .
இந்திய மக்களுடன் எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கை மக்கள் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்திருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
அதேபோல உலகில் எந்த ஒரு இடத்திலும் பயங்கரவாதம் காணப்படக்கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பஹல்கம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை மக்களின் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துக்கொள்வதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய பிரதமர் மோடியிடம் கூறியுள்ளார்.
Link: https://namathulk.com/
