உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பாக மொத்தம் 28 வேட்பாளர்களும் 111 அரசியல் கட்சி ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 3 ஆம் திகதி முதல் 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு கூறியுள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறியதாக 259 முறைப்பாடுகளும், குற்றவியல் தன்மை கொண்ட 71 சம்பவங்கள் குறித்த காலப்பகுதியில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 22 முறைப்பாடுகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்புடைய 06 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்விடயம் தொடர்பில், ஒரு வேட்பாளர் மற்றும் ஐந்து அரசியல் கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Link: https://namathulk.com/