தெற்கு ஈரானில் உள்ள ஒரு துறைமுகத்தில் ஏற்பட்ட பெரிய வெடிப்பு மற்றும் தீ விபத்தில் குறைந்தது 516 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
பந்தர் அப்பாஸுக்கு வெளியே உள்ள ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் இந்த வெடிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இஸ்லாமிய குடியரசிற்கான கொள்கலன் ஏற்றுமதிக்கான முக்கிய முனையமாக காணப்படும் இந்த துறைமுகத்தில் வருடாந்தம் சுமார் 80 மில்லியன் டன் பொருட்களை கையாளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெடிச் சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த வெடிச்சம்பவத்தின் போது துறைமுகத்தின் கட்டடம் ஒன்றும் இடிந்து வீழ்ந்துள்ளது.
பாரசீக வளைகுடாவின் குறுகிய வாயிலான ஹார்முஸ் நீரிணையிலிருந்து , ராஜேய் துறைமுகம் சுமார் 1,050 கிலோமீட்டர் (650 மைல்) தொலைவில் உள்ளது.
தெஹ்ரானின் வேகமாக முன்னேறி வரும் அணுசக்தி திட்டம் குறித்த மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தைகளுக்காக ஈரானும் அமெரிக்காவும் , ஓமானில் இன்று சந்தித்தபோது இந்த வெடிச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link: https://namathulk.com/