பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைப் பாதுகாக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக புத்தளத்தில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
இதன்போது, பன்னாட்டு நிறுவனங்களால் விவசாயிகள் சுரண்டப்படக்கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மூலம் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்து, நியாயமான விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஒரு பொறுப்பான அரசாங்கமாக, பெரிய நிறுவனங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
Link: https://namathulk.com/
