அலரி மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருந்த பாதையை திறந்து இருக்கின்றோம் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருந்த பாதையை திறந்து இருக்கின்றோம் எதற்காக நாம் கிளிநொச்சிப் பாதைகளை மூடி வைத்திருக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, அனைத்து மக்களும் சமனான உரிமைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த அரசாங்கம் அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன், கடந்த காலங்களிலே பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களின் காணிகள் இராணுவ முகாம்கள் வைத்திருக்க வேண்டி ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி கூறினார்.
அந்த காணிகள் தொடர்பில் இராணுவ தலைவர்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தியு;ளளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அத்துடன், விடுவிக்க கூடிய அனைத்து இடங்களையும் மீண்டும் மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல், பாரம்பரியமாக பயிர் செய்து வந்த நிலங்கள் கூகுள் வரைபடத்தின்படி வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
குறித்த பகுதிகள் நிலங்களை மீண்டும் மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
Link: https://namathulk.com/
