2019 ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட வைத்தியர் ஷாபியின் மகள் உயர்தர பரீட்சையில் சாதனை படைத்துள்ளார்.
பாரதூரமான குற்றசாட்டுக்களால் வைத்தியர் ஷாபி மற்றும் அவரின் குடும்பத்தினர் சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் ஷாபி, விசாரணைகளின் பின்னர் குற்றம் அற்றவர் என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
எனினும் கைது செய்யப்பட்ட நாள் முதல் வைத்தியர் ஷாபி மற்றும் அவரின் குடுப்பத்தினர் பல்வேறு சமூக புறக்கணிப்புக்களை சந்தித்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு வெளியிடப்பட்ட உயர்தர பெறுபெருகளின் அடிப்படையில் வைத்தியர் ஷாபியின் மகள் உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாவட்ட மட்டத்தில் 12 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
எதிர்மறை சூழ்நிலைகளுக்கு எதிராக நின்று வெற்றி பெற்ற நம்பிக்கையின் உருவமாக இந்த மாணவி பார்க்கப்படுகிறார்.
தந்தை மீதான குற்றச்சாட்டுக்களில் மனந்தளராது, கற்றலில் சிந்தனையை செலுத்திய மாணவிக்கு நமது TV யின் வாழ்த்துக்கள்.
Link: https://namathulk.com/
