வடக்கில் போர் முடிவடைந்த பின்னர் வனவளத்திணைக்களம் கூகுள் வரைபடத்தினை பார்த்து காணிகளுக்கு எல்லையிட்டது. அது தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டு மக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற தேசியமக்கள் சக்தியின் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
யாழில் திஸ்ஸ விகாரை தொடர்பாக ஒரு பிரச்சனை உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
குறித்த காணிகளின் உரிமையாளர்களும் பிக்குமார்களும் இந்த பிரச்சனையை தீர்க்க இடமளித்தால் அவர்கள் தீர்த்துக்கொள்வார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த பிரச்சினை தீர்க்க இடமளிக்காமல் இருப்பது, அரசியல் எனவும், அவர்களுக்கு தேவை இதனூடாக இனவாதத்தை தூண்டுவது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வடக்கின் தோல்வி கண்ட அரசியல்வாதிகள் அந்த இடத்திலே ஒரு முறுகல் நிலையை ஏற்ப்படுத்த முனைவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தென்பகுதியில் தோல்விகண்ட அரசியல் தலைவர்கள் ஆங்காங்கே ஒரு முரன்பாட்டை ஏற்படுத்த முனைவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், காணி உரிமையாளர்கள் பிக்குமார்கள் இடையில் இணக்கபாட்டை ஏற்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்படும் எனவும் ஜயாதிகதி உறுதியளித்தார்.
தமிழ் பேசும் திறமையானவர்களை இலங்கை கிரிக்கேட் அணியில் இணைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.
link: https://namathulk.com/