வரலாற்றில் முதல் முறையாக, கண்டியில் உள்ள பள்ளிவாசல்கள் புனித தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தங்கள் கதவுகளைத் திறந்ததாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
குருநாகலில் உள்ள பரகஹதெனிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, இனங்கள் மற்றும் மதங்களாகப் பிரிந்து செல்வதற்கு அப்பால் அனைவரும் இலங்கையர்கள் என மக்கள் இப்போது சிந்திக்கத் தொடங்கியுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்த நாடு மாறி வருகிறது, நாம் ஒரு புதிய வழியில் செயற்பட வேண்டும் என மக்கள் உணரத் தொடங்கியுள்ளதாக பிரதமர் கூறினார்.
இவ்வாறான மாற்றங்களை அமைச்சுக்களிலேயும் காண முடியும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
Link: https://namathulk.com/
