இந்தியாவின் பதிலடிக்கு பயந்து 1,200 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இராணுவத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி உள்ளனர்.
இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவரும் இருந்து கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் இராணுவத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர்.
கிட்டத்தட்ட இராணுவத்தைவிட்டு 1200 பாகிஸ்தான் வீரர்கள் வெளியேறியுள்ளனர்.
இது பாக்கிஸ்தான் இராணுவத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால், அச்சத்தில் பாகிஸ்தான் வீரர்கள் இராணுவத்தைவிட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
link: https://namathulk.com/
