சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 643 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 26 மற்றும் 27ஆம் திகதி தலைமன்னார், கற்பிட்டி மற்றும் நீர்கொழும்பு ஆகிய கடற்பகுதிகளில், கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 643 கிலோ கிராம் பீடி இலைகளுடன் டிங்கி படகு ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு என்பன மன்னார் மற்றும் புத்தளம் மதுவரி விசேட பிரிவினரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/
