தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமாருக்கு இன்று (28) பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம பூஷண் விருது வழங்கி இந்திய மத்திய அரசு கௌரவித்து வருகின்றது.
டெல்லியில் இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் நடிகர் அஜித்குமாருக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி, பிள்ளைகள், அவரது சகோதரர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Link: https://namathulk.com/
