வவுனியாவில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் கோரிக்கை

Aarani Editor
1 Min Read
Missing Person

வவுனியா, நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் குளத்தில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண உதவுமாறு நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

வவுனியா- இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம்- நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் பகுதியில் இருந்து கடந்த முதலாம் திகதி சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது.

குறித்த சடலம் 40 வயதிற்கு மேற்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மரணமடைந்து 10 – 15 நாட்களுக்கு பின்னரே குறித்த சடலம் மீட்கப்பட்டிருந்தது.

நீல கலர் கோடு போட்ட சேட்டு அவரது சடலத்தில் அருகில் கண்டு பிடிக்கப்பட்டது.

உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதால் சடலத்தை பற்றிய மேலதிக அடையாளங்களை பெற முடியவில்லை.

வவுனியா வைத்தியசாலையில் உள்ள பிரேத அறை குளிரூட்டி இயங்காமையால் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதனை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் கோருவதுடன், அவ்வாறு இல்லாவிடின் அரச செலவில் குறித்த சடலத்தை நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

குறித்த வயதை கிட்டிய நபர்கள் எங்காவது காணாமல் போயிருந்தால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தின் 0718592778 அல்லது 0242054286 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *