Boycott China என்றவாறு “சீன தயாரிப்புகளை புறக்கணிக்கவும்”, “நான் சீனாவை வெறுக்கிறேன்” போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட தொப்பிகள் மற்றும் ரி -சேட்டுக்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான அரச எதிர்ப்பு சுலோகங்கள் ஏற்றுமதியாளர்களுக்கு சீன அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறான பொருட்கள் சீனாவினால் உற்பத்தி செய்யப்பட்டு பெருமளவில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
அமெரிக்காவினால் அண்மையில் சீன உற்பத்திகளுக்கு 125 வீத வரி விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இவ்வாறான பதிவுகள் பகிரப்பட்டுள்ளன.
எனினும் சர்வதேச ஊடகங்களுக்கு தகவல் வழங்கியுள்ள சீன அரசாங்கம் இது முற்றுமுழுதான பொய் என கூறியுள்ளது .
இந்த பதிவுகள் இந்திய இணையதள பாவனையாளர்களிடம் அதிகம் பகிரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சீன-இந்திய எல்லை மோதலுக்கு மத்தியில் இந்தியாவின் சமீபத்திய தேசியவாதத்தையும் சீனாவிற்கு எதிரான எதிர்ப்பையும் இந்த விடயம் எதிரொலிக்கிறது என கூறப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/
