ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மே மாதம் 3 ஆம் திகதி முதல் மே 6 ஆம் திகதி வரை வியட்நாமிற்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணம் சர்வதேச வெசாக் தினத்தை அடிப்படையாகக் கொண்டது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, பல புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கையெழுத்திடப்படவுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கைகள் நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
Link: https://namathulk.com/
