அன்னதான நிகழ்வுகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்.

Aarani Editor
0 Min Read
Dansal

எதிர்வரும் வெசாக் காலத்தில் அன்னதானம் வழங்குவோர், அது தொடர்பில் மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அன்னதான நிகழ்வுகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, அன்னதான நிகழ்வுகள் , உணவு விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் நடமாடும் உணவு விற்பனை நிலையங்கள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இந்த நடவடிக்கையில், சுமார் மூவாயிரம் பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *