சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் இன்று மாலை 4.30 அளவில் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வு ஊடகவியலாளர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம் பெற்றது.
தராகி சிவராமின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்ததனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரினால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
