லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) உரிமையாளராக, இலங்கை கிரிக்கெட் (SLC), LPL இன் நிகழ்வு உரிமையாளரான IPG குழுமத்துடன் இணைந்து, கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் யாழ்ப்பாண கிங்ஸ் அணிகளின் பங்குரிமை நிறுத்தப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லீக் தொடரின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தக் கடமைகளை அந்தந்த உரிமையாளர்கள் நிறைவேற்றத் தவறியதால், இந்த ஒப்பந்தங்கள் நீக்கப்பட்டதாக IPG குழுமம் SLCக்கு முறையாகத் தெரிவித்துள்ளது.
மேற்கூறியவற்றின் விளைவாக, எதிர்வரும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையாளர்கள் புதிய உரிமையின் கீழ் இடம்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வு உரிமையாளராக, IPG குழுமம் LPL உரிமையாளர் அணிகள் மீதான பிரத்தியேக உரிமைகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அதற்கமைய, அந்த உரிமையாளர்களின் உரிமைகளை ஆர்வமுள்ள தரப்பினருக்கு மாற்றுவதற்கும் அல்லது ஒதுக்குவதற்கும் அதிகாரம் காணப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் மற்றும் IPG குழுமம் லங்கா பிரீமியர் லீக்கின் நேர்மை, தரநிலைகள் மற்றும் வெற்றியை நிலைநிறுத்துவதில் உறுதியாக உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
Link: https://namathulk.com/
