அக்கரப்பத்தனையிலிருந்து டயகம வரையிலான மூன்று கிலோமீட்டர் தூர வீதியை புனரமைத்து தருமாறுகோரி, அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்கரப்பத்தனையிலிருந்து டயகம வரையிலான மூன்று கிலோமீட்டர் தூரமுள்ள வீதியில் பயணிக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும், குறித்த வீதியில் வாகனப் போக்குவரத்திற்கு கடும் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
Link: https://namathulk.com/
