இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க வெள்ளை மாளிகை விரும்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்;.
26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது.
சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.
சிம்லா ஒப்பந்தம் இரத்து, இந்திய விமானங்களுக்குப் பாகிஸ்தான் வான்பரப்பு மூடல் உள்ளிட்ட நடவைடிகைகளை பாகிஸ்தான் எடுத்துள்ளது.
இதோடு நிற்காமல் இரு நாடுகளும் இராணுவ தாக்குதலையும் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க வெள்ளை மாளிகை விரும்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதன்போது பேசிய அவர் “இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில் மேலும் பற்றத்தை அதிகரித்துள்ளது.
Link: https://namathulk.com/
