கனடா பாராளுமன்றத் தேர்தலில் காலிஸ்தான் ஆதரவாளரும் என்.டி.பி. கட்சித் தலைவருமான ஜக்மீத் சிங் படுதோல்வி அடைந்தார்.
வெளியாகியுள்ள கனேடிய பொதுத் தேர்தல் முடிவுகளின்படி ஆளும் லிபரல் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட என்.டி.பி எனப்படும் புதிய ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
அக்கட்சியின் தலைவரும், காலிஸ்தான் ஆதரவாளராக அறியப்படுபவருமான ஜக்மீத் சிங் தோல்வி அடைந்துள்ளார்.
இதையடுத்து, கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து இராஜினாமா செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் ஜக்மீத் சிங் தோற்ற நிலையில், அவரது கட்சிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கட்சிக்கு தேசிய அங்கீகாரம் பெற வேண்டுமானால் குறைந்தது 12 தொகுதிகளிலாவது வென்றிருக்க வேண்டும்.
ஆனால் அவரின் என்.டி.பி., கட்சி படுதோல்வி அடைந்துள்ளதால் கட்சியின் தேசிய அங்கீகாரமும் பறிபோகும் நிலைமையில் இருப்பதாக சர்வதேக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Link: https://namathulk.com/
