காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நள்ளிரவு பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா, சுந்தர்பானி மற்றும் அக்னூர் பகுதிகளிலேயே பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய இராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பஹல்கம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதலில் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Link: https://namathulk.com/
