இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் அண்மையில் நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே இன்று போராட்டம் நடைபெற்றது.
சுமார் 200 முதல் 300 பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக வெளிப்படுத்தும் பதாதைகளும் இதன்போது போராட்டக்காரர்களால் காட்சிப்படுத்தப்பட்டது.
ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமுக்கு அருகிலுள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலுக்கு போராட்டகாரர்கள் தமது கண்டனத்தை பதிவு செய்தனர்.
Link: https://namathulk.com/
