மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில்; ஐ.எஸ். அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
இங்கு கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் கால்நடைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
அத்துடன் பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் போர்னோ மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பயணித்த பஸ் ஒன்று கண்ணிவெடி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது
.
இந்த சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த 26 பேர் உடல் சிதறி உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கண்டிவெடி தாக்குதலை போகோ ஹராம் பயங்கரவாதிகள் மேற்கொண்;டிருக்கலாம் என பாதுகாப்புத்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Link: https://namathulk.com/
