மின்சாரக் கட்டணங்களை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் சுமார் ஐம்பது வீதம் அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த கோரிக்கையை நிராகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கலந்து கொண்ட கூட்டத்தின் போது, இலங்கை மின்சார சபை அதிகாரிகள் இந்த கோரிக்கையை முன்வைத்ததாகவும், அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால், சபை நிதி ரீதியாக நிலையற்றதாகிவிடும் என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியமும் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க பரிந்துரைத்துள்ளதாகவும் மின்சார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும், தற்போதைய நிலையில் மின்சாரக் கட்டணங்களைப் பராமரிப்பதால் நிதி ஸ்திரமின்மை ஏற்படாது என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com/
