ரோயல் பார்க் கொலை : 01 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்திய மைத்திரிபால சிறிசேன

Aarani Editor
1 Min Read
RoyalPark Murder

ரோயல் பார்க் கொலை வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால 01 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்தியுள்ளார்.

கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு மன்னிப்பு வழங்கிய குற்றத்துக்காக விதிக்கப்பட்ட இழப்பீட்டையே, சிறிசேன முழுமையாக செலுத்தியுள்ளதாக அவரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

ரோயல் பார்க் கொலை குற்றவாளி ஜூட் ஜெயமஹாவை மன்னித்து , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரத்து செய்து.

குறித்த தீர்மானம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்கப்பட்டது.

ஏனவே, பிரதிவாதியான மைத்திரிபால சிறிசேன, மனுதாரருக்கு 01 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

2005 ஆம் ஆண்டு கொழும்பு ரோயல் பார்க் வீட்டுத் தொகுதியில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த யுவோன் ஜோன்சன் என்பவரை கொலை செய்த வழக்கில் ஜெயமஹாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *