அரசாங்கம் எரிபொருள் விலையைக் குறைத்தாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றத்தை அறிவிக்க முடியாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் பேதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, பொதுப் போக்குவரத்திற்கான கட்டணம் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை செயற்படுத்துமாறும் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர குறிப்பிட்டார்.
நாட்டிற்குப் பொருத்தமானதைச் செய்யும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு உள்ளது எனவும் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர கூறினார்.
Link: https://namathulk.com/
