2026ஆம் ஆண்டுக்கான டி20 மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி லண்டன் – லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டி ஜூலை 5ஆம் திகதி நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
12 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கிண்ணத் தொடர் ஜூன் 12 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
மொத்தமாக 33 போட்டிகள் நடைபெற உள்ளன.
இதற்கு முன்னதாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கிண்ண தொடருக்கான இறுதிப்போட்டி லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
லோர்ட்ஸ் மைதானத்தை தவிர்த்து ஓல்ட் ட்ராஃபோர்ட், ஹெட்டிங்லே, எட்ஜ்பேஸ்டன், தி ஓவல், ஹாம்ப்ஷயர் பௌல் மற்றும் பிரிஸ்டல் கவுன்டி ஆகிய மைதானங்களிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்தப் போட்டிகள் இரண்டு குழுக்களாக நடைபெறுகின்றன.
விரிவான அட்டவணை உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/
