நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியை வீழ்த்தியதன் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
நேற்றைய போட்டியில்; சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 19.2 ஓவர்களில் 190 ஓட்டங்களை பெற்றது.
சென்னை அணி சார்பாக அதிரடியாக ஆடிய சாம் கரண் 47 பந்துகளுக்கு 88 ஓட்டங்களைப் அதிகபட்சமாக பெற்றிருந்தார்.
பஞ்சாப் அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் ஹட்ரிக் உட்பட ஒரே ஓவரில் 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.
பின்னர் 191 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 194 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஷ்ரேயாஸ் அய்யர் அணிக்காக 72 ஓட்டங்களை எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியது.
இதேவேளை சென்னை அணி 10 போட்டியில் 2 வெற்றி, 8 தோல்வி என இறுதி இடம் பிடித்ததுடன் நடப்பு தொடரில் ப்ளே ஓப் சுற்றிற்கு தகுதி பெறாமல் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
அத்துடன் ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மைதானத்திலேயே ஒரு தொடரில் அதிக தோல்விகளை சந்தித்த முதல் அணியாக சென்னை அணி பதிவாகியுள்ளது.
Link: https://namathulk.com/
