2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்க தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய கட்டாய விடுமுறையை தேசிய தேர்தல் ஆணைக்கழு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான விடுமுறை விசேட விடுமுறையாக வழங்கப்பட வேண்டும் எனவும் மேலும் அது அவர்களின் தனிப்பட்ட விடுமுறையை பாதிக்கக்கூடாது எனவும் தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கு 40 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்ய ½ நாள் விடுமுறையும், 40-100 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்ய 1 நாள் விடுமுறையும், 150 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்ய 2 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட உள்ளது.
பணியிடத்திலிருந்து வாக்குச் சாவடிக்குச் சென்று திரும்ப வேண்டிய சந்தர்ப்பங்களில் மூன்று நாட்கள் விடுப்பு வழங்கப்படலாம் என தேர்தல் ஆணைக்குழ தெரிவித்துள்ளது
Link: https://namathulk.com/
