இலங்கையில் உள்ள வணிக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
செலான் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 295.50 ரூபாவிலிருந்து 295.40 ரூபாவாகவும், 302.50 ரூபாவிலிருந்து 302.40 ரூபாவாகவும் குறைந்துள்ளன.
NDB வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 295.70 ரூபாவிலிருந்து 295.55 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 303.70 ரூபாவிலருந்து 303.55 ரூபாவாகவும் குறைந்துள்ளது.
மக்கள் வங்கி அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 295.93 ரூபாவிலிருந்து295.83 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 303.68 ரூபாவிலிருந்து 303.58 ரூபாவாகவும் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி 293.73 ரூபாவிலிருந்து 293.48 ரூபாவாகவும், 302.75 ரூபாவிலிருந்து 302.50 ரூபாவாகவும் குறைந்துள்ளன.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 295.50 ரூபாவிலிருந்து295.25 ரூபாவாகவும், 303.50 ரூபாவிலிருந்து 303.25 ரூபாவாகவும் குறைந்துள்ளன
Link: https://namathulk.com/
